Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியாவில் நவீன நீர்மூழ்கிக் கப்பல்: கடற்படையை வலுப்படுத்த ரூ.80 ஆயிரம் கோடியில் திட்டம்

இந்தியாவில் நவீன நீர்மூழ்கிக் கப்பல்: கடற்படையை வலுப்படுத்த ரூ.80 ஆயிரம் கோடியில் திட்டம்
இந்தியாவில் நவீன நீர்மூழ்கிக் கப்பல்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் திறனை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவிலேயே கட்டப்பட உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

‘புராஜெக்ட் 75 ஐ’ எனப்படும் இந்தத் திட்டம் தற்போது இறுதி முடிவுக்காக சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த தைசன்குரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனமும் இணைந்து நீர்மூழ்கிக் கப்பல்களை கட்ட உள்ளன. ஜெர்மனிய நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் இவை தயாரிக்கப்பட உள்ளன.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் வளிமண்டலச் சார்பற்ற இயக்க அமைப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெறும். இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட காலத்துக்கு கடலுக்கடியில் இயங்கும் திறனைப் பெறும். இந்தத் திட்டத்துடன், ஏற்கெனவே இந்திய கடற்படையில் உள்ள ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய உள்நாட்டு வளிமண்டலச் சார்பற்ற இயக்க அமைப்பைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மஸகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கூடுதலாக மூன்று ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் படையை விரிவுபடுத்தவும், உள்நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முந்தைய செய்தி
பெண்கள் இலவசமாகப் பயணம் - திட்டத்தை எதிர்த்து வழக்கு
அடுத்த செய்தி
தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடையா? - மின்சார வாரியம் விளக்கம்

தொடர்புடைய செய்திகள்